Posts

Showing posts from May, 2023

இலட்சியவாதம்

 கல்வி தொடர்பாக காலத்துக் காலம் பல்வேறு கருத்துக்கள் கல்வி தத்துவவியலாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே கல்வியில் இலக்குகளும் நோக்கங்களும் உருவாக்கப்படுகின்றன ஒவ்வொரு நாடுகளும் தமது மாணவர்களிடம் எதிர்பார்ப்பவைகளை குறிக்கோளாகும் இலக்குகளாகவும் காணப்படுகின்றன இத்தகைய குறிக்கோள்களையும் வழக்குகளையும் நிர்ணயிப்பதில் கல்வி தத்துவங்கள் பாரியளவு செல்வாக்கு செலுத்துகின்றது. குறிப்பாக பயன்பாட்டு வாதத்திற்கு முன்னர் தோன்றிய கல்வி தத்துவங்களான பிளேட்டோவின் இலட்சியவாதம் ரூசோவின் இயற்கை வாதம் போன்ற தத்துவங்கள் கல்வி குறிக்கோள்களையும் விளக்குகளையும் நிர்ணயிப்பதில் பாரியளவிலான பங்களிப்பு செய்துள்ளது.